ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தனுஷ் தங்களது மகன் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். தனுஷ் தங்களது மகன் தான் என்று பல ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் கொடுத்து வரும் அவர்கள், தனுஷ் தங்களுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி கேட்கவில்லை என்றால் ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்றும் தனுஷ் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா சார்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.