அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று |
பார்த்தாலே பரவசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சமுத்திரகனி, அதன்பிறகு விஜயகாந்த் நடித்த நிறைஞ்ச மனசு படத்தை இயக்கினார். அதன்பிறகு 4 ஆண்டுகள் வரை எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். சின்னத்திரை தொடரை இயக்கினார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கியபோதும் நடிகராக முன்னணிக்கு வந்தார். இப்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணசித்ர நடிகராகிவிட்டார்.
நாடோடிகள் படத்தை தெலுங்கில் சம்போ சிவ சம்போ என்ற பெயரில் இயக்கினார். ரவிதேஜா நடித்த இந்த படம் தமிழில் பெற்ற வெற்றியை பெறவில்லை. நிமிர்ந்து நில் படத்தை ஜான்டா பாய் கப்பிராஜு என்ற பெயரில் இயக்கினார். இரண்டு மொழிகளிலும் படம் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் படம் இயக்க இருக்கிறார். பவன் கல்யாண் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது சமுத்திரகனி கடைசியாக இயக்கிய வினோதய சித்தம் படத்தின் ரீமேக் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. "ரசிகர்கள் நல்ல செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம். நானும் பவன் கல்யாணின் ரசிகர் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்து அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்" என்று கூறியிருக்கிறார் சமுத்திரகனி.