ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில் சுந்தர் பாலு தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய ஹீரோயின். அவருடன் ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகியார் நடித்துள்ளர். நேற்று நடந்த விழாவிற்கு சுபிக்ஷா மட்டுமே வந்திருந்தார். மற்ற 3 ஹீரோயின்களும் வரவில்லை. இத்தனைக்கும் ஆஷ்னா ஜவேரியும், ஐஸ்வர்யா தத்தாவும் பிசியான நடிகைகள் இல்லை.
இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது "ஒவ்வொரு நடிகையும் வெவ்வேறு காரணங்களை சொல்லி விழாவுக்கு வரவில்லை. வரலட்சுமி சரத்குமார் தான் ஐதராபாத்தில் குடியேறி விட்டதாகவும், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாலும் வர இயலாது என்று தெரிவித்து விட்டதாக" கூறினார்கள்.
விழாவில் நடிகை சுபிக்ஷா பேசியதாவது: கன்னித்தீவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஆக்ஷன், பாடல் பாடுவது என்று ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம். திரைப்படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குனர் சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார், என்றார்.




