ரவி மோகன், யோகி பாபுவின் ‛ஆன் ஆர்டினரி மேன்' புரொமோ வெளியீடு | ரீ ரிலீஸ் ஆகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' | அடுத்த ஆண்டு தசராவுக்கு வெளியாகும் 'வாயுபுத்ரா': ஹனுமன் புகழ் பாடும் 3டி அனிமேஷன் படம் | நடிகனாக 21 ஆண்டு நிறைவு: அர்ஜூனை மறக்காத விஷால் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே | எனக்கே கதை புரியலை: 'சக்தித் திருமகன்' குறித்து விஜய் ஆண்டனி | தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்க : நீதிபதி முன் கதறிய நடிகர் தர்ஷன் | அந்தக்காட்சியில் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கப்பட்டேன் : நடிகை மோகினி | சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி: ஏ.ஆர்.முருகதாசை புறக்கணித்தாரா? | மும்பையில் கைது செய்யப்பட்ட மஞ்சு வாரியர் பட இயக்குனர் ஜாமினில் விடுதலை |
இயக்குனர் மனோபாலா பல படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது சரத்குமார், தயாரிப்பாளர்கள் தேனப்பனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் சரத்குமாரும், தேனப்பனின் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் மனோபாலா சாதாரண உடையில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் வெளியானதையடுத்து விஜய்யின் 66வது படத்தில் சரத்குமாரும் தேனப்பனும் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக ஒரு செய்தி பரவ தொடங்கியது. அதையடுத்து உடனடியாக இந்த தகவலை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா. அதில் சரத்குமார், தயாரிப்பாளர் தேனப்பனுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் விஜய் 66வது படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதல்ல. இது வேறு படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிவித்துள்ள மனோபாலா, தான் விஜய் படத்தில் நடிக்க வில்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.