ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்காரு வாரி பாட்டா. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் முதல்நாளிலேயே 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக மகேஷ்பாபுவின் நடிப்பை பாராட்டி வரும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ஆந்திராவில் உள்ள கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அங்குள்ள ஒரு தியேட்டர் வளாகத்தில் அவருக்கு 35 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து அழகு பார்த்துள்ளார்கள். பொதுவாக நடிகர்களுக்கு தான் பிரம்மாண்ட கட்-அவுட் வைப்பார்கள் ரசிகர்கள். மிகவும் அரிதாக நடிகைகளுக்கு எப்போதாவது கட்-அவுட் வைப்பார்கள். அந்தவகையில் இப்போது கீர்த்தி சுரேஷிற்கு கட்-அவுட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள் ரசிகர்கள்.