அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
இயக்குனரும், நடிகருமான மனோபாலா நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் . அவரது மறைவுக்கு ஏராளமான திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள மனோபாலா, அதையடுத்து யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றபோது, தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் மனோபாலா. அப்போது படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு யோகி பாபு, நடிகர் சாம்ஸ் உட்பட பலரும் கேக் ஊட்டி விடுகிறார்கள்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை காமெடி நடிகர் சாம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனோபாலா சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. நண்பர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோபாலா சாருடம் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இது இருக்கும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் கதிர்வேலு கூறுகையில், ‛‛மரண வேதனையிலும் படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே "என்னால முடியலடா! மருத்துவ மனைக்கு போய் வருகிறேன்" என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா? கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? காலங்கள் கடந்தாலும் கடைசியாய் நடித்து எங்களோடு வாழ்ந்த கணங்கள் என்றும் எங்கள் நினைவில் நிலைத்து நிற்கும்,'' என தெரிவித்துள்ளார்.