கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' |
தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். இப்போதும் பல இளம் இசையமைப்பாளர்கள் முன்னணியில் இருந்தாலும் இவருக்கு இருக்கும் இசை வரவேற்பு வேறு யாருக்கும் இருந்தது இல்லை. தற்போதும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். அதோடு பல ஊர்களில் இசை கச்சேரிகளையும் நடத்துகிறார்.
சமீபத்தில் துபாயை தொடர்ந்து சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்தியவர் அடுத்து கோவையில் இசை விருந்து படைக்க உள்ளார். வருகிற ஜூன் 2ம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் இளையராஜா. அன்றைய தினம் கோவை, கொடீசியா வளாகத்தில் இசைக்கச்சேரி நடத்துகிறார்.
இதுபற்றி இளையராஜா கூறுகையில், ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்'' என தெரிவித்துள்ளார்.