ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தனது 41ஆவது படத்திலும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதை அவரது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மீனவர்கள் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அங்கு படப்பிடிப்பில் இருந்தபோது இயக்குநர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இதனால் கோபமடைந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி விட்டதால் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த செய்தியை சூர்யா தரப்பு மறுத்துள்ளது.
இதுபற்றி 2டி நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‛‛கன்னியாகுமரியில் 34 நாளில் சூர்யா 41 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் கோவாவில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.