புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பார்த்திபன் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழா மேடையே ஒரு பூங்கா போல செட் செய்து அற்புதமான லைட்டிங், மேடை அலங்காரங்களுடன் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.
ஆனால், நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் ஒன்று பார்வையாளர்களையும், விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானையும் அதிர்ச்சியடைய வைத்தது. விழாவில் ரோபோ சங்கர் மைக் கேட்க பார்த்திபன் சற்றே கோபமாகி ரோபோ சங்கரை நோக்கி மைக்கை வீசி எறிந்து, “அதை முன்னாடி இல்ல கேட்கணும்,” என்று கோபமாகப் பேசினார்.
இதுபற்றி பார்த்திபன் நம்மிடம் கூறுகையில், ‛‛ரஹ்மானுக்கு விருது கொடுக்கும் போது அந்த வெள்ளி ஷீல்டு 8 கிலோ இருந்தது. அவர் மேல் அந்த வெயிட் போய் சேர்ந்து விடக் கூடாது என்கிற பதட்டம் இருந்தது. கை, கால்களில் ஏதோ ஷாக் அடித்த மாதிரி ஒரு உணர்வு. அப்போது கொஞ்சம் நிலை தடுமாறிவிட்டேன். கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் வேலை பார்த்தேன். இதுபோன்ற நிறைய காரணங்களால் நான் செய்யக்கூடாத ஒரு விஷயத்தை செய்துவிட்டேன். வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். இனி சரி செய்து கொள்கிறேன்.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.