என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
சமந்தா நடித்த பேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்து இயக்கும் புதிய வெப் தொடர் பர்ஜி. இந்த தொடரில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ராஷி கண்ணா, ரெஜினா, கேகே மேனன், அமோல் பலேகர், உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இது ஒரு திருடன் போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஒரு திருடனுக்கும், திறமையான ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சதுரங்க ஆட்டம் தான் கதை என்கிறார்கள். விஜய்சேதுபதி பேமிலி மேன் 2 தொடரிலேயே நடிக்க வேண்டியது. அப்போதிருந்த சூழ்நிலையில் அவர் மறுத்து விட்டார். அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் மைம்கோபி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.