புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மதுரை, மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார். இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் தனுஷ் என் மகன் என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் 2017-ல் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தனுஷ் போலி பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்தார். இதற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணையின் போது தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை அறிய, அந்த சான்றிதழ் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. ஆனால் அதற்கு முன்பு என் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக நடிகர் தனுஷ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.