வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் இயக்கிய டாணாக்காரன் படம் சமீபத்தில் வெளியானது. இது போலீஸ் பயிற்சி பள்ளியின் பின்னணில் உருவான படம். இந்த படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 'டாணாக்காரன்' திரையிடப்பட்டது. இதில் இயக்குநர் தமிழ் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஒரு படத்துக்குப் பட்ட கஷ்டம் எல்லாமே, அதன் வெற்றியில் காணாமல் போய்விடும் என்பார்கள். அப்படியான சந்தோஷத்தில் இருக்கிறேன். 'டாணாக்காரன்' கதையை எதற்காக எழுதினேனோ, அதற்கான விஷயமும் நடைபெற்றதில் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காவலர் பயிற்சி பள்ளியை முன்வைத்து எழுதிய கதையை அங்கே பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள். அவர்கள் அனைவரும் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 'டாணாக்காரன்' திரையிட ஆணையிட்ட பயிற்சி ஐ.ஜி அருளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் தமிழ்.