புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். கருப்பின நடிகர்களிலேயே உலகில் அதிகமான ரசிகர்களை வைத்திருப்பவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அவருக்கு சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் தனது மனைவி குறித்து மோசமாக வர்ணணை செய்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார்.
இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும் ஆஸ்கர் அகடாமி அவருக்கு 10 ஆண்டுகள் தடைவிதித்தது. 10 ஆண்டுகள் வரை வில் ஸ்மித்தின் எந்த படத்தையும் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு ஏற்காது. அவரும் விழாவில் கலந்து கொள்ள முடியாது. இந்த தண்டனையை மனப்பூர்வமாக ஏற்பதாக வில் ஸ்மித் அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில் ஸ்மித் இந்தியா வந்தார். அவரது திடீர் வருகை அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் வருகைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் அவர் இஸ்கான் பக்தர். அதனால் வந்த வேகத்தில் இஸ்கான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்றதும் இஸ்கான் பக்தர்கள் தான்.
அடுத்து அவர் கரன் ஜோஹர் இயக்கும் ஸ்டூடன்ட் ஆப் தி ஈயர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மூன்றாவது இந்தியா, ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த மூன்று காரணங்களுக்காக அவர் இந்தியா வந்ததாக கூறப்படுகிறது.