தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர் | மத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் பாத்திமா | நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் |
கன்னடத் திரையுலகத்தை இந்திய சினிமா வரைபடத்தில் மட்டுமல்லாது உலக சினிமா வரைபடத்திலும் இடம் பெறச் செய்துவிட்டது 'கேஜிஎப் 2'. ஏப்ரல் 14ம் தேதி வெளியான இந்தப் படம் ஏப்ரல் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 70 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 500 கோடி வசூலித்து 2ம் இடத்தைப் பிடித்தது.
அடுத்து, ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 19 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 142 கோடி வசூலித்து 5ம் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களிலும் இப்படம் உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கடந்த 11 நாட்களில் கேஜிஎப் 2 படம் 850 கோடி வசூலைக் கடந்துள்ளது.