பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நானும் ரவுடிதான் படபிடிப்பு நடந்து வந்தபோது காதல் வயப்பட்ட நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில், தங்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதன் பிறகு வருகிற ஜூன் மாதம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த ஊரில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களது திருமணத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.