ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் சிரஞ்சீவி அரசியலில் இருந்து ஒதுங்கியபின் மீண்டும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என மித வேகத்தில் நடித்து வந்தவர், தற்போது வேகம் கூட்டியுள்ள நிலையில், கைவசம் நான்கைந்து படங்களை வைத்துள்ளார். அந்தவகையில் அவரது ஆச்சார்யா படம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்திலும் நடித்து முடித்துவிட்டார் சிரஞ்சீவி.
இதையடுத்து அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் மற்றும் அவரது 154 படத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார் சிரஞ்சீவி. பாபி (கே.எஸ்.ரவீந்திரா) என்பவர் இயக்கும் அவரது 154 படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.. இந்தநிலையில் நேற்றுமுதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த 41 வருடங்களுக்கு முன் தெலுங்கில் பாலச்சந்தர் டைரக்சனில் வெளியான இதி கதா காது என்கிற படத்தில் ஸ்ருதிஹாசனின் தந்தையான கமல்ஹாசனுடன் இணைந்து அந்தப்படத்தின் ஹீரோவாக நடித்தவர் தான் சிரஞ்சீவி,.. ஆனால் இன்று கமலின் மகளே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது சினிமா தரும் ஆச்சர்யங்களில் ஒன்று.