ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான பீஸ்ட் போதிய வரவேற்பை பெறாததால் விஜய் ரொம்பவே அப்சட் ஆகியிருக்கிறார். இதனால் அடுத்து உடனடியாக ஒரு வெற்றியை கொடுத்து தனக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப வேகமெடுத்திருக்கிறார்.
விஜய் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இந்த படத்தை இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கி விட்டது. இதுவரை 30 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது விஜய், ராஷ்மிகா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் தொடங்குகிறது என்கிறார்கள். இந்த படம் குடும்ப உறவுகளை பற்றிய சென்டிமெண்ட் படம் என்பதால் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லை. எனவே படத்தை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். வருகிற தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வந்து ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால் படத்தின் பணிகளும் மின்னல் வேகத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.