ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜய் அவரது 66வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். விஜய்யின் படம் ஒன்றிற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் தமன்.
தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தமனுக்கு விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முன்பு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார் தமன். ஆனால், அந்தப் படம் சில கருத்து வேறுபாடுகளால் நின்று போனது. அப்படத்திற்குப் பதிலாகத்தான் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' உருவானது.
விஜய் படத்தின் மூலம் தமிழிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தமன் பாடல் கம்போசிங்கில் அமர்ந்துள்ளாராம். தமிழ் ரசிகர்களுக்கு, குறிப்பாக விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் பாடல்கள் இருக்குமாம். 'பீஸ்ட்' படத்தில் இரண்டே இரண்டு பாடல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. ஆனால், விஜய்யின் 66வது படத்தில் ஐந்து பாடல்கள் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.