‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
திரையரங்குகளில் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா தனக்கான டப்பிங்கை தற்போர்த்து நிறைவு செய்துள்ளார். அவர் டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் முடிந்தது. இதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் மிக மிக ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனுபவத்தை அற்புதமானதாக மாற்றிய அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்." என தனது பதிவில் கூறியுள்ளார் .