காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்'. இந்த படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி நேற்று இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனஎன பல மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு யஷின் ரசிகர்கள், உலக சாதனை புரிந்திருக்கின்றனர். அதாவது 25,650 சதுர அடியில் யஷின் மிகப்பெரிய போஸ்டரை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் யாஷ் அந்த போஸ்டர் வீடியோவை வெளியிட்டு 'எனது ரசிகர்கள் குடும்பம் மிகவும் வலிமையானது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.