காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழ்த் திரைப்படங்களை உலக அளவில் கொண்டு போய் சேர்த்ததில் நடிகர் ரஜினிகாந்திற்குத்தான் மிக முக்கிய பங்குண்டு. அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில தமிழ்ப் படங்களுக்கு பல நாடுகளில் மார்க்கெட்டை ஓபன் பண்ண வைத்தவர் அவர்தான்.
அவருக்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருந்தாலும் அமெரிக்காவில் வெளியீட்ற்கு முதல் நாளில் நடத்தப்படும் பிரிமீயர் காட்சிகளுக்கான வரவேற்பில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் மட்டுமே அதிக சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள்.
இதுவரையில் அமெரிக்காவில் நடைபெற்ற முன்னணி நடிகர்களின் பிரிமீயர் காட்சிகளில் ரஜினிகாந்த் நடித்து 2016ல் வெளிவந்த 'கபாலி' திரைப்படம் 19 லட்சம் யுஎஸ் டாலர் பிடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து தற்போது வெளிவந்துள்ள விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் 6 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து 3, 4, 5, 6, 7, 8 ஆம் இடங்களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0, பேட்ட, காலா, தர்பார், அண்ணாத்த, லிங்கா' ஆகிய படங்கள் உள்ளன. விஜய் நடித்த 'மெர்சல்' 9வது இடத்திலும், 'சர்க்கார்' 10வது இடத்திலும் உள்ளன. வேறு எந்த ஹீரோவின் படங்களும் இந்த டாப் 10ல் இடம் பிடிக்கவில்லை.