படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் ரஜினி தனது மானசீக குருவாக மதிக்கிறவர் அமிதாப் பச்சன். அவரது படங்களின் பாதிப்பில் தான் பல படங்களில் நடித்ததாக ரஜினி கூறியுள்ளார். 'ரஜினிதான் ரியல் சூப்பர் ஸ்டார் 'என்று அமிதாப்பச்சன் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருக்கிறது. அமிதாப் பச்சன் நடித்த சூப்பர் ஹிட் படங்களை தமிழில் ரீமேக் செய்து அதில் நடித்திருக்கிறார் ரஜினி. அதன் விபரம் வருமாறு:
ஷங்கர் சலீம் சைமன் (அமர் அக்பர் அந்தோணி)
1978ம் ஆண்டு வெளிவந்தது சைமனாக ரஜினியும், விஜயகுமார் ஷங்கராகவும், ஜெய் கணேஷ் சலீமாகவும் நடித்தனர்.
நான் வாழ வைப்பன், (மஜ்பூர்)
ரஜினிகாந்த், சிவாஜி இணைந்து நடித்தனர். 1979ல் வெளியானது.
பில்லா (டான்)
ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று . இதன் ரீ-மேக் அஜித் நடிப்பில் வெளிவந்து அதுவும் வெற்றி பெற்றது.
தர்மத்தின் தலைவன் (காஸ்மே வாதே)
இந்த படத்தில் ரஜினிகாந்த், சுஹாசினி மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
தீ (தீவார்)
ஹிந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் மறைந்த சசி கபூர் நடித்த இரண்டு சகோதரர்களின் வேடங்களை ரஜினிகாந்த் (பச்சனாக) மற்றும் நடிகர் சுமன் (கபூராக) நடித்தனர்.
மிஸ்டர் பாரத் (திரிசூல்)
1985 ம் ஆண்டில் வெளியான படம். இதில் ரஜினிகாந்த் தனது தாயை ஏமாற்றியதற்காக தனது தந்தையிடம் பழிவாங்கும் மகனாக நடித்தார். இதுவும் ஒரு பிளாக்பஸ்டராக அமைந்தது. தந்தையாக சத்யராஜ் நடித்தார்.
பணக்காரன் (லாவாரிஸ்)
1990ம் ஆண்டில் வெளிவந்தது, ரஜினி அமிதாப் நடித்த கேரக்டரிலும் கவுதமி, ஜீனத் அமன் நடித்த கேரக்டரிலும் நடித்தனர்.
மாவீரன் (மார்ட்)
ரஜினிகாந்த் அமிதாப்பச்சனின் பாத்திரத்தில் நடித்தார், அம்ரிதா சிங்கின் கதாபாத்திரத்தில் அம்பிகா நடித்தார்
படிக்காதவன் (குத்தார்)
1985ல் வெளிவந்தது, ரஜினியுடன் சிவாஜியும் நடித்தார். அம்பிகாவும், ரம்யா கிருஷ்ணனும் நடித்தனர்.
சிவா (கூன் பசினா)
1989ம் ஆண்டு வெளியான அமீர்ஜன் இயக்கிய இந்தப் படத்தில் நடிகை-நடனக் கலைஞர் ஷோபனா, படத்தில் ரேகாவின் வேடத்தில் நடித்தார்.
வேலைக்காரன் (நமக் ஹலால்)
பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய 'நமக் ஹலால்' பாலிவுட்டின் வெற்றி ஜோடிகளில் ஒருவரான அமிதாப் பச்சன் மற்றும் சசி கபூர் நடித்தது, தமிழில் வேலைக்காரன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.