ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
சினிமாவில் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு 'கேஜிஎப் 2' படத்தின் எடிட்டர் உஜ்வல் குல்கர்னி உதாரணமாக இருக்கிறார். நாளை வெளியாக உள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
முதல் பாகம் வந்த போதே வேறு ஒரு தளத்தில் படத்தைக் கொடுத்திருந்தார்கள் என்ற பாராட்டு எழுந்தது. இரண்டாம் பாகத்தின் டிரைலர் வந்த போது அதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. அந்த எதிர்பார்ப்பு வரக் காரணமாக அமைந்த டிரைலரையும் எடிட் செய்தது உஜ்வல் தான்.
சில பல குறும்படங்களை எடிட் செய்தவர் உஜ்வல். சில படங்களுக்கான ரசிக எடிட்டராகவும் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். 'கேஜிஎப்' முதல் பாகம் பற்றி சிறு வீடியோ ஒன்றை எடிட் செய்து உஜ்வல் வெளியிட்டுள்ளார். அதை பிரசாந்தின் மனைவி பார்த்து ஆச்சரியப்பட்டு அவரைப் பற்றி தன் கணவரிடம் சொல்லியிருக்கிறார். அதன் பின் பிரசாந்த் அந்த வீடியோவைப் பார்த்து இரண்டாம் பாகத்தின் எடிட்டிங் பொறுப்பை முழுவதுமாக வழங்கியிருக்கிறார்.
இயக்குனருடன் கடந்த மூன்று ஆண்டுகளாக நன்றாகப் பயிற்சி பெற்று இப்போது சிறந்த எடிட்டராக அவர் உருவாகியுள்ளார் என படத்தின் நாயகன் யஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். நாளை படம் வந்த பிறகு உஜ்வலுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.