ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை வைத்தே மீண்டும் ஜனகணமன என்கிற படத்தையும் இயக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகிறார் பூரி ஜெகன்நாத். படப்பிடிப்புத் தளத்திற்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ள சிரஞ்சீவி இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தான் தற்போது காட்பாதர் என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான வேடம் ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு விடைபெற்ற நிலையில் தற்போது பூரி ஜெகன்நாத் முதல் முறையாக ஒரு நடிகராக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணை முதன்முறையாக சிறுத்தா என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான். தற்போது அவரையே தனது படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் சிரஞ்சீவி.




