ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வு நடைபெற்று கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஓடிவிட்டது. இந்த வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மூன்று மாத சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
ஆமை வேகத்தில் நடந்து வந்த இந்த வழக்கு சமீபத்தில் சம்பந்தப்பட்ட நடிகை உருக்கமாக தனது நிலை குறித்து வெளியிட்ட பின்னர் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஒருபக்கம் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனை விசாரிப்பதற்காக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாளை அவர் குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். நடிகை கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் தங்களுக்குள் மொபைல் போனில் பேசிக்கொண்டபோது இந்த கடத்தலுக்கு மூலக்காரணமே காவ்யா மாதவன் தான் என்றும் அவரது கணவர் நடிகர் திலீப் பின்னர் தான் இந்த திட்டத்தில் இணைந்தார் என்றும் பேசிக் கொண்ட ஒரு ஆடியோ போலீஸ் வசம் தற்போது துருப்புச் சீட்டாக கிடைத்துள்ளதாம். இதன் அடிப்படையில் விசாரணை செய்யத்தான் காவ்யா மாதவனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் காவ்யா மாதவனுக்கும் தற்போது திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.