தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் |
வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா குரோஷி நடித்து பிப்ரவரி 24ம் தேதி வெளியான படம் வலிமை. இந்த படம் இதுவரை 300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மார்ச் 25ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வலிமை படம் வெளியிடப்பட்டது. அதையடுத்து ஓடிடியில் வெளியான முதல் நாளில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் பார்க்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் போனி கபூர். தற்போது ஒன்பது நாட்களில் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் என்ற சாதனையை செய்திருப்பதாக போனி கபூர் டுவிட்டரில் அறிவித்திருக்கிறார். இதை யடுத்து இன்னும் சில நாட்களில் 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து வலிமை மிகப்பெரிய சாதனை செய்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.