டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஏஞ்சலினா ஜூலி, ஜெனிபர் லாரன்ஸ், ஸ்கேர்லட் ஜான்சன் போன்ற ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோயின்கள் போன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படம் தான் ஆண்ட்ரியாவை ஆக்ஷன் கேரக்டரை நோக்கி நகர்த்தியது. அதன்பிறகு விஸ்வரூபம் படத்தில் இந்திய ரா பிரிவு அதிகாரியாக நடித்தார். துப்பறிவாளன் படத்தில் லேடி கேங்ஸ்டராக நடித்தார். தற்போது கா, நோ எண்ட்ரி படங்களில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அடர்ந்த காட்டுக்குள் சுற்றுலா செல்லும் ஆண்ட்ரியா அங்கு மரத்தின் உச்சியில் இருக்கும் குடில் ஒன்றில் தங்குகிறார். அந்த குடிலை கொலைவெறி கொண்ட காட்டு நாய்கள் சுற்றி வளைக்கிறது. அவைகளை ஏமாற்றி அவற்றில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் நோ என்ட்ரி படத்தின் கதை.
நோ என்ட்ரி படத்தை அழகு கார்த்திக் இயக்கி இருக்கிறார். இதனை ஜம்போ சினிமாஸ் சார்பாக ஸ்ரீதர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் சிரபுஞ்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார். இதுதவிர மேலும் சில படங்களில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.




