2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாக உருவாகியிருந்த இந்த படத்தில் இருவருக்குமே சமவாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியாவதற்கு முன்பு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களிடையே யார் பெரிய ஆள் என்பது போன்று கருத்து விவாதம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இந்த படம் வெளியான பின்பு இந்த படத்தில் இருவரின் நட்பையும், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது அவர்கள் இருவரது பாசப் பிணைப்பையும் பார்த்து அவர்களது ரசிகர்களே தற்போது ஒற்றுமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜூனியர் என்டிஆர் கூறும்போது, “எனக்கும் ராம் சரணுக்கும் கிட்டத்தட்ட முப்பது வருடமாக பகை இருந்து வருகிறது. அதாவது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது எங்கள் இருவரது சினிமா குடும்பத்தினருக்குள்ளும் அப்படி ஒரு பகை இருப்பதாக எனக்குள் ஒரு உணர்வு தோன்றிவிட்டது. கடந்த பத்து வருட காலமாக எங்களது படங்கள் வெளியாகும்போது எங்களுக்குள் ஏதோ போட்டி இருப்பது போன்று ரசிகர்களும் நாங்கள் இருவரும் எதிரிகள் என்றே நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் இது எல்லாவற்றையும் ஆர்ஆர்ஆர் படம் அடியோடு மாற்றிவிட்டது. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் ராம்சரணுடன் நிஜமான அன்பும் பிரிக்க முடியாத நட்பும் எனக்கு உருவானது” என்று கூறியுள்ளார்.