டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்த நடிகைகளில் ப்ரியா பவானி சங்கரும் ஒருவர். கதைகளை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை பிடித்துவிட்டார். தற்போது அரைடஜன் படங்களுக்கு மேல் அவர் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா அடிக்கடி போட்டோஷூட்களை வெளியிடுவார். அந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவது வழக்கம்.
சமீபகாலமாக அவரும் கவர்ச்சிக்கு மாறி வருகிறார். இந்த முறை ப்ரியா பவானி சங்கர் இதுவரை இல்லாத வகையில் மாடலாக டிரெஸ் செய்துள்ளார். அது பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பையை தைத்து போட்டது போல் பளபளப்பாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஹேர்ஸ்டைல் மேக்கப் என அனைத்துமே வித்தியாசமாக உள்ளது. பிரியா பவானி சங்கரா இது என பலரும் பார்த்து ஆச்சர்யப்படும் அளவுக்கு அவரது தோற்றம் உள்ளது.
இதை சிலர் ரசித்து வந்தாலும் இதுவரை அவரை தேவதை, கனவு கன்னி என வர்ணித்து வந்த நெட்டீசன்கள் பலரும் இப்போது, 'ப்ப்பா!!, என்ன நீங்களா இப்படி?' கமெண்ட் அடித்து கலாய்க்கவும் செய்கின்றனர்.




