அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
'பேச்சிலர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள திவ்யபாரதி அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களைப் பார்க்கும் சீனியர் நடிகைகளுக்குக் கண்டிப்பாக அதிர்ச்சியும், ஆச்சரியமும் இருக்கும். அந்த அளவிற்கு கிளாமரான புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிடுவார் திவ்யா.
தற்போது மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள திவ்யாபாரதி அடுத்தடுத்து பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. விதவிதமான கோணங்களில், விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அவற்றின் உச்சமாக நேற்று பிகினி உடையில் கடற்கரை மணலில் விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார்.
இப்படியான புகைப்படங்களை ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள்தான் பதிவிடுவது வழக்கம். அவர்களுக்கு தமிழ் நடிகையான தான் சற்றும் சளைத்தவரல்ல என்று திவ்யபாரதி பதிவிடுகிறாரோ ?. இந்த பிகினி புகைப்படங்களுக்கு சில ரசிகர்கள் கோபமாகவும், கெட்ட வார்த்தையிலும், சில ரசிகர்கள் பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளார்கள்.