ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். அதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாக யூடியூப் சேனல்களில் நடிகர்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி அனைத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர் மீது சினிமா உலகினர் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
சில நடிகைகள் அவரை தொடர்புகொண்டு அவருடன் மோதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து சினிமாத்துறையினர் குறித்த சர்ச்சை செய்திகளை அவர் வெளியிட்டு வருவதால் அவருக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் குறித்த அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் சம்பந்தமாக பயில்வான் ரங்கநாதன் கைதாகிறாரா? இல்லை இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவதற்கு அவருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.