ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் குறைந்த கால தயாரிப்பாக உருவாகியுள்ள படம் மன்மத லீலை. அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே இணைந்து நடித்துள்ள இந்த படம் டைட்டிலுக்கு ஏற்றமாதிரி அடல்ஸ் ஜானரில் தான் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இதன் டிரைலர் வெளியாகி உள்ளது.
இதனைப் பார்த்துவிட்டு நடிகர் எஸ்.ஜே சூர்யா, டிரைலரை மேற்கோள் காட்டி வெங்கட்பிரபுவின் சேட்டைகள் என ஜாலியாக கமெண்ட் அடித்திருந்தார். உடனே வெங்கட் பிரபு இதற்கெல்லாம் விதை நீங்கள் போட்டது தான் சார் என தேவர் மகன் படத்தில் சிவாஜி கூறுவதுபோல தன்னடக்கத்துடன் பதில் சொல்ல, அதற்கு பயங்கரமாக சிரித்துள்ளார் எஸ்.ஜே சூர்யா.
இருபது வருடங்களுக்கு முன்பு வாலி, குஷி ஆகிய படங்களை இயக்கிய பிறகு நியூ என்கிற அடல்ஸ் ஒன்லி படத்தை இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அந்த படத்திற்கு ஹீரோக்கள் வேறு யாரும் நடிக்க சம்மதிக்காததால் தானே ஹீரோவாக மாறினார். அதன்பிறகு அதே பாணியில் அன்பே ஆருயிரே என்கிற படத்தையும் இயக்கினார். அதை குறிப்பிட்டு தான் வெங்கட் பிரபு இதற்கான விதை நீங்கள் போட்டது என பதில் கூறியுள்ளார்.