ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகர் மகத் ராகவேந்திரா, 'மங்காத்தா' திரைப்படம் மூலம் பிரபலமானவர். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த மகத், 'காதல் கண்டிஷன் அப்லே" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'ஈமோஜி' என்ற வெப் சீரியஸில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். மகத்துக்கு ஜோடியாக தேவிகா சதீஷ் மற்றும் மானசா ஆகிய இரு நடிகைகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், விஜே.ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் இந்த வெப் சீரிஸ் ஆஹா ஓடிடித் தளத்தில் வெளியாகவுள்ளது.