சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
யஷ் நடிக்கும் கேஜிஎப் படம் கோலார் தங்கச் சுரங்க பின்னணியில் உருவாவது போன்று தற்போது நானி நடிக்கும் தசரா படம் ஆந்திர மாநிலம் கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்க பின்னணியில் உருவாகிறது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.