துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகா் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். மரகதநாணயம் படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் உருவாகி உள்ளது. இதுகுறித்து வெளிவந்த தகவல்கள் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. சமீபத்தில் ஆதி தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். பல நேரங்களில் ஆதியும், நிக்கி கல்ராணியும் இணைந்து விமானத்தில் பயணம் செய்தார்கள். ஐதராபாத்தில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி உள்ளனர். தங்களது காதலை இருவருமே இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆதி கூறியிருப்பதாவது : கிளாப் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து, லிங்குசாமி இயக்கும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சவாலான கதைகளை நிதானமாகத் தேர்ந்தெடுக்கிறேன். அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பார்ட்னர்' ஒரு நகைச்சுவை படம். எனது திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும். காதல் திருமணம்தான் ஆனாலும் இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும். விரைவில் முறைப்படி அறிவிப்பேன். என்றார்.