கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் |
பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் ராதே ஷ்யாம் படம் வெளியானது. பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ராதே ஷ்யாம் மூலம் அதை பிரபாஸ் அதை ஈடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியுள்ளது. இதற்கு அடுத்ததாக பிரசாந்த் நீல் டைரக்ஷனில் நடித்து வரும் சலார் படத்தை பிரபாஸ் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் சலார் படத்தின் படப்பிடிப்பின்போது பிரபாஸுக்கு சில காயங்கள் ஏற்பட்டன. தற்போது இதற்காக ஒரு மைனர் சர்ஜரி செய்ய வேண்டி இருப்பதால் ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்புகிறார் பிரபாஸ். இந்த தகவலைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மைனர் சர்ஜரி முடிந்து அவர் விரைவில் குணமாகி திரும்ப வேண்டுமென சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.