வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் |
தெலுங்கு திரையுலகில் உள்ள கமர்சியல் இயக்குனர்களில் முக்கியமானவர் போயபதி சீனு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவை வைத்து இவர் இயக்கிய அகண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூலையும் வாரி குவித்தது. இதையடுத்து அவர் ராம் பொத்தினேனியை வைத்து இயக்கியுள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை பொதுமேடையிலேயே வெளிப்படுத்தியுள்ளார் போயபதி சீனு.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு என புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினர்.
இதை தொடர்ந்து 'எவரிகி தல வன்சாடு' என்கிற பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ள இந்தப்படத்திற்காக ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக போயபதி சீனு கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசும்போது, சூர்யாவுடன் ஒரு படத்தில் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவேன் என தனது விருப்பத்தை வெளிப்படுத்த, சூர்யாவும் அதை ஆமோதித்தார்.