தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
தமிழில் மாதவன் நடித்த ரன் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி உள்பட பல படங்களில் நடித்தவர் 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறினார். பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உடல்கட்டை ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டு தற்போது மலையாளத்திலும் சத்தியன் அந்திக்காடு இயக்கியுள்ள மகள் என்ற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதோடு தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் மீரா ஜாஸ்மின் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இப்போது லோ நெக் பிராக் உடையணிந்து கவர்ச்சிகரமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலானது.