12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
ஹாலிவுட்டின் கருப்பு வெள்ளை காலத்தில் அதாவது சார்லி சாப்ளின் காலத்தில் அவரைப்போன்றே காமெடி நடிகராக புகழ்பெற்றிருந்தவர் பஸ்டர் கீட்டன். சார்லி சாப்ளின் வாழ்க்கை சினிமாவாக தயாரானது போன்று தற்போது பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையும் தயாராக இருக்கிறது.
இதனை ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கவுள்ளார். இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற போர்ட் வெசஸ் போர்ட் என்ற படத்தை இயக்கியவர். தற்போது ஜேம்ஸ் மேங்கோல்ட் நடிக்கும்'இண்டியானா ஜோன்ஸ் 5' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
பஸ்டர் கீட்டன் 1917 முதல் 1941 வரை சார்லி சாப்ளினுக்கு இணையான நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கை 'பஸ்டர் கீட்டன்: கட் டு தி சேஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை தழுவி படம் தயாராகிறது. இப்படம் பஸ்டர் கீட்டனின் இளமை கால வாழ்க்கை, அவர் சந்தித்த அவமானங்கள், அவரது வெற்றிகள் அவரது வீழ்ச்சிக்கு காரணமான குடிப்பழக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசவுள்ளதாக கூறப்படுகிறது.