ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் இணைந்து நடிப்பது அபூர்வமான ஒன்று. இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் இருவரையும் நடிக்க வைக்கும் இயக்குனர் சிக்கலில் சிக்கிக் கொள்வார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு முன்னணி நடிகைகள் ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இப்படம் ஏப்ரல் 28ம் தேதியன்று வெளியாக உள்ளது. ஆனால், படத்திற்கான பிரமோஷன்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்போதே ஆரம்பித்துவிட்டார். நேற்று 22.02.2022 ஒரு சிறப்பான நாள் என்பதால் 'Tuesday' என்பதை 'Twosday' என மாற்றி நயன், சமந்தா இருக்கும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். நேற்றிரவு 20.02 மணிக்கு நடிகை சமந்தா, அந்த போஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்து “22.02.2022ம் தேதியின் 20.02 மணி சிறப்பானது…எங்களுடைய ஸ்பெஷல் நட்பிற்காக, அவர் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை, இருந்தாலும் அவர் உங்களுக்கு அன்பைத் தருகிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்தப் பதிவை நடிகைகள் ராஷி கண்ணா, ருஹானி ஷர்மா உள்ளிட்டவர்களும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களும் லைக் செய்துள்ளார்கள். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இடம் பெற்றுள்ள 'டைட்டானிக்' காட்சியைப் படமாக்கிய வீடியோ ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.