ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இது மலையாளத்தில் இவர் நடிக்கும் இரண்டாவது படம். இந்த படத்தில் ஆர்டிஓ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் மோகன்லால் மற்றும் உடன் நடித்த நடிகர்கள் சித்திக், நந்து, ரக்ஷனா உள்ளிட்ட பலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு அடுத்து அவர் பதிவிட்டுள்ள செய்திதான் ஹைலைட்டான விஷயமே.
அதாவது பொதுவாக படப்பிடிப்பில் நடிக்கும் சக நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்றாலே ஷ்ரத்தா ஸ்ரீநாத் ரொம்பவே வெட்கப்படுவாராம் ஆனால் ஆராட்டு படப்பிடிப்பில் கடைசி தினத்தன்று வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னதாக வீட்டிற்குச் சென்றால், தனது பெற்றோர் மோகன்லாலுடன் நடித்த போட்டோ எடுத்துக் கொண்டாயா என்று கேட்பார்கள் அவர்களுக்கு காட்டுவதற்கு ஆதாரம் வேண்டும் என்பதற்காகவே மோகன்லால் மற்றும் உடன் நடித்த நடிகர்கள் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.




