ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
சினிமாவில் சில படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் குடும்ப பிரச்னையால் அவ்வப்போது மீடியா வெளிச்சத்தில் இருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது ஸ்டைலில் கலக்கலாக விளையாடி வருகிறார். சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து அதிலேயும் தனது திறமையை காட்டி வருகிறார். இந்நிலையில் வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வனிதாவிற்கு நடிகர் ஆகாஷ் என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. ஆகாஷூக்கும் வனிதாவுக்கும் விஜய் ஸ்ரீஹிரி என்ற மகனும் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தனர். அவரது இரண்டாவது திருமணத்தில் மேலும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் வனிதாவுக்கு உள்ளனர். இதில் விஜய் ஸ்ரீஹரி முதல் கணவர் ஆகாஷ் பரமாரிப்பில் வளர்ந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் கூட தனது மகன் விஜய் பற்றி வனிதா ஒரு முறை உருக்கமாக பேசியிருந்தார். விஜய் ஸ்ரீஹரி சினிமா தொடர்பான படிப்பை முடித்துள்ளதுடன் ஒரு குறும்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவர் விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.