சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'மாறன்' படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரத்திரங்களில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிலநாட்களுக்கு முன்பு இப்படத்தின் பொல்லாத உலகம் என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது 'அண்ணன தாலாட்டும்' என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. அண்ணன் மற்றும் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடலை அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார் .இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.