பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
மாநாடு படத்தையடுத்து அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்த பிறகு நாகசைதன்யாவுடன் 2014 ல் தெலுங்கில் ஒக்க லைலா கோசம் என்ற படத்தில்தான் அவர் அறிமுகமானார். இப்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, பிரபாஸுடன் ராதேஷ்யாம் போன்ற படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். இது தவிர, தற்போது இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.