ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'ரன், சண்டக்கோழி' படங்கள் மூலம் '2 கே' ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். துறுதுறு, பரபரவென இருக்கும் அவரது நடிப்பும், பேச்சும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அவரது இடத்தை இதுவரையிலும் வேறு எந்த நடிகையாலும் நிரப்ப முடியவில்லை என்பது உண்மை.
தன்னுடைய இடம் மீண்டும் தனக்குத்தான் என்று சொல்லுமளவிற்கு சமூகவலைதளத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. 20 பிளஸ் நடிகைகள் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களுக்கு 'டப்' கொடுக்கும் விதத்தில் நாளை 40 வயதைக் கடக்கப் போகும் மீரா சற்று முன் அதிரடியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் மீரா ஜாஸ்மினுக்கு 40 வயது என யாரும் சொல்ல மாட்டார்கள். “உங்கள் சொந்த மேஜிக்கை உருவாக்குங்கள்” என்ற கேப்ஷனுடன் மீரா அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மீராவின் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் இன்றைய இளம் நடிகைகளுக்குக் கண்டிப்பாகப் பொறாமை ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.