'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை தரிசித்தார். பத்து நாட்களுக்கு முன்புதான் அந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதற்கடுத்து கேரளாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று சிரஞ்சீவி தரிசனம் செய்து வருகிறார். மனைவி சுரேகாவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குச் சென்ற புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபரிமலைப் பயணம். கூட்டத்தாலும், என்னை அடையாளம் கண்டு கொண்டு உற்சாகமடைவதைத் தவிர்க்கவும், கோயிலுக்குச் செல்ல 'டோலி' சேவையைப் பயன்படுத்தினோம். அதைத் தூக்கிச் சென்றவர்களுக்கு என்னுடைய நன்றி,” என டோலி தூக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து வணக்கம் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறியதால் சிரஞ்சீவி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.