ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்' ,'ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தினார். யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் இயக்கும் புதிய படத்திற்கு "இறைவன் மிகப்பெரியவன் " என தலைப்பு வைத்துள்ளார்.
இந்த படத்திற்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளனர். பட பிடிப்பு விரைவில் துவங்குகிறது. ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அமீரின் வழக்கமான கூட்டணியான ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.




