அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் |
ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்சி 15', அதாவது ராம்சரணின் 15வது படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் நாளை பிப்ரவரி 8 முதல் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் ஆரம்பமாக உள்ளது. அங்கும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் படத்தின் முக்கியமான சில காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம்.
ஷங்கர் முதன் முதலாக இயக்கும் நேரடி தெலுங்குப் படம் இது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
ராம்சரண் நடித்து முடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டின் போது மீண்டும் அப்படத்திற்கான சில பிரமோஷன்களைச் செய்ய உள்ளார்களாம். அதற்குள்ளாக 'ஆர்சி 15' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தப் போகிறார்களாம்.