ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் திரையுலகில் அதிகபட்ச வியாபார மார்க்கெட் உள்ள நடிகர்களின் வரிசையில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். திரையுலகில் நுழைந்து குறுகிய காலத்தில் இந்த உயரத்தை தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தனுஷின் 3 படத்தில் இணைந்து நடித்தாலும் முதன்முறையாக கடந்த 2012ல் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்கிற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் வெளியாகி நேற்றுடன் பத்து வருடங்களை தொட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த சாதனையை கொண்டாடி வருகிறார்கள்
அதேபோல மலையாள திரையுலகில் செகண்ட் ஷோ என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். பிரபல நடிகர் மம்முட்டியின் வாரிசாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையாலும் வித்தியாசமான கதை தேர்வினாலும் முன்னணி நடிகர்கள் வரிசைக்கு உயர்ந்தார் துல்கர் சல்மான். இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்கும் பான் இந்திய நடிகராகவும் மாறிவிட்டார். இவர் நடித்த செகண்ட் ஷோ திரைப்படமும் பத்து வருடத்திற்கு முன்பு இதே தேதியில்தான் ரிலீஸ் ஆனது.
அந்தவகையில் ஒரே நாளில் ஹீரோவாக அறிமுகமான இவர்கள் திரையுலகில் போட்டி நிறைந்த தற்போதைய சூழலில் இன்று வெற்றிகரமான ஹீரோக்களாக பத்து வருடங்களை கடந்து வந்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய சாதனைதான்.




