காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மேயாதமான் படத்தில் அறிமுகமான பிரிய பவனி சங்கர் தற்போது யானை, திருச்சிற்றம்பலம், பத்து தலை உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது தனது சமூகவலைதளத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். அதில், மௌனம் பகிர்ந்து கைவிரல் பிடித்து கதை பேசுகிறது விடியாமல் இருந்தால்தான் என்ன? உனக்கு மட்டும் கேட்ட என் மனம் இசைத்த பாடல் மொழி தேடாமல் உன்னோடு சேர்ந்து தூரம் போது வரிகள் என்ற பாடலை திருப்பிக்கொடு இம்முறை மௌனம் புரிய என் இடம் நாம் இல்லை. வார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். இந்த பாடலுக்கு கேப்ஷனாக பாடல்கள் மற்றும் பாடுபவர் பிரியா பவானி சங்கர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தான் நடிக்கும் படத்திற்கு இப்படி ஒரு பாடலை அவர் எழுதி இருப்பாரோ? என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. பிரியா பவானி சங்கரின் இந்த கவிதைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.